PREVIOUS ARTICLE

Movies படத்தில் மிக பவ்வியமாக நடித்த கேப்ரியலா கார்ல்டன் இப்படி கவர்ச்சி காட்டு

NEXT ARTICLE

Movies

மாஸ்டர் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை குறித்த விஜய்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தின் வேலைகள் முடிந்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகியிருக்க வேண்டியது.

ஆனால், படத்தில் ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஊரடங்கில் இருந்து சினிமா பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள சூழலில் படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்பது குறித்து தெளிவான முடிவெடுக்க முடியாமல் தயாரிப்பு தரப்பு குழம்பி வந்தது.

Advertisement

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என உறுதியாக தெரியாததால், அதைப் பற்றியும் அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை ஒரே அடியாக தீபாவளி பண்டிகைக்கு ஒத்திவைத்து தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி படத்தின் டிரைலரை மட்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள்.

Related Post

Latest News

அமெரிக்க காவற்துறையினரால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று?
மலச்சிக்கலுக்கான சிறந்த தீர்வு இதோ!
ஒன்ராறியோ அரசாங்கம் அனைத்து அவசர உத்தரவுகளையும் இன்னும் 28 நாட்களுக்கு நீட்டிக்க திட்டம்
முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி!
மே-18ஐ வீட்டிலிருந்தபடியே நினைவுகூர்தல்!
யாழில் அடுத்தடுத்து இரு கோவில்களை உடைத்து கொள்ளை!