PREVIOUS ARTICLE

NEXT ARTICLE

News Channels நியூசிலாந்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த கொரோனா!
News Channels

சீனாவில் புதிய வைரஸ்

பெய்ஜிங்: கொரோனா போலவே, உலக பெருந்தொற்று நோயாக மாறும் அளவுக்கு வீரியம் கொண்ட, புதிய வைரஸ் சீனாவின் பன்றிப் பண்ணைகளில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பன்றிகளிடம் வைரஸ் இந்த கொடுமை போதாது என்று, இப்போது, சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பன்றிகளிடமிருந்து பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன மருத்துவ ஆராய்ச்சிக் குழு இந்த வைரஸ் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பன்றிப் பண்ணை மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் G4 EA H1N1 என்ற ஒரு வைரஸ் பன்றியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பன்றிப் பன்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரத்தத்தில் இந்த வைரஸ் பரவல் காணப்பட்டுள்ளது. எனவே, பன்றிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த குழு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று கொரோனா போல, உலக பெருந்தொற்று என்ற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான் என்றாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால், இந்த வைரஸ் குறித்து தற்போது பயம் தேவையில்லை என்றும் சீன நாட்டு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. வேகமாக பரவும் வைரஸ் புதிய வகை வைரஸ் மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு உடனடி அச்சுறுத்தல் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும், அது சுவாசக் குழாயில், அதாவது மூக்கு முதல் நுரையீரல் வரை, மனிதர்களிடம் மிக வேகமாக வளர்ந்து பெருக்கக்கூடும். சில சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்து மற்றொரு சுகாதார நெருக்கடி பின்தொடர வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்திருந்தனர். இந்த நிலையில்தான், புதிய வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, புதிய வைரஸ் 2009ம் ஆண்டு கண்டறியப்பட்ட பன்றிக் காய்ச்சல் வைரஸைப் போன்றது. அந்த வைரஸுக்கு A/H1N1pgm09 என்று பெயரிடப்பட்டது. இது G4-EA H1N1 என பெயரிடப்பட்டுள்ளது. வைரஸ் ஒத்ததாக இருந்தாலும் ஒரே மாதிரியாக இல்லை. மேலும் இது மனிதர்களுக்கு முற்றிலும் புதிய நோய்க்கிருமியாக இருக்கும் என்பதால் மனித உடல் இதை எதிர்கொள்ள கஷ்டப்படகூடும் என்று தெரிவித்துள்ளனர் பன்றிக் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


பன்றிப் பண்ணை மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் G4 EA H1N1 என்ற ஒரு வைரஸ் பன்றியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பன்றிப் பன்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரத்தத்தில் இந்த வைரஸ் பரவல் காணப்பட்டுள்ளது. எனவே, பன்றிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த குழு தெரிவித்துள்ளது.

வேகமாக பரவும் வைரஸ் புதிய வகை வைரஸ் மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு உடனடி அச்சுறுத்தல் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும், அது சுவாசக் குழாயில், அதாவது மூக்கு முதல் நுரையீரல் வரை, மனிதர்களிடம் மிக வேகமாக வளர்ந்து பெருக்கக்கூடும். சில சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்து மற்றொரு சுகாதார நெருக்கடி பின்தொடர வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்திருந்தனர். இந்த நிலையில்தான், புதிய வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, புதிய வைரஸ் 2009ம் ஆண்டு கண்டறியப்பட்ட பன்றிக் காய்ச்சல் வைரஸைப் போன்றது. அந்த வைரஸுக்கு A/H1N1pgm09 என்று பெயரிடப்பட்டது. இது G4-EA H1N1 என பெயரிடப்பட்டுள்ளது.


Related Post

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!