சீனா இந்திய மோதல்

 

இந்திய - சீன ராணுவத்தினர் இடையேயான எல்லை மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோதி அளித்த விளக்கத்துக்கு தவறான அர்த்தம் கற்பிக்கும் முயற்சிகள் நடகின்றன என்று இந்தியப் பிரதமர் அலுவலகம் இன்று, சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஜூன் 15 அன்று நடந்த மோதலின்போது தாங்கள் இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்று சீனா தெரிவித்திருந்தது. நேற்று, வெள்ளிக்கிழமை, நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி சீனா இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறியிருந்தார்.

சீனா இந்திய எல்லைக்குள் வரவில்லை என்றால், இந்திய ராணுவத்தினர் எங்கு, எவ்வாறு கொல்லப்பட்டனர் என இந்திய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, "கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து கட்டுமானங்களை எழுப்ப சீனா முயன்றது; அந்த நடவடிக்கைகளை நிறுத்தவும் மறுத்தது; அதனால்தான் ஜூன் 15 அன்று எல்லையில் மோதல் நடந்தது," என்று இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எல்லைகள் என்ன என்பது இந்திய வரை படத்திலிருந்தே தெளிவாக தெரியும். தற்போதைய சூழலில் இந்திய பகுதிகள் சில சட்ட விரோதமான ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.

60 ஆண்டு காலத்தில் 43 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இந்திய நிலப்பரப்பு எவ்வாறு விட்டுக் கொடுக்கப்பட்டது என்பது இந்த நாட்டுக்கே தெரியும் என நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டது.

  •  

எந்த ஒரு நாடும் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை தன்னிச்சையாக மாற்ற முடியாது. அப்படி மாற்ற இந்திய அரசும் அனுமதிக்காது என்பதும் நேற்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீரமிக்க ராணுவ வீரர்கள் இந்திய எல்லையைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அவர்களின் மனோதிடத்தை குலைக்கும் வகையில் தேவையற்ற சர்ச்சையை கிளப்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் அந்த இந்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இந்திய - சீன எல்லை மோதல் தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறிய கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிப்பதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) காணொளி காட்சி வாயிலாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய எல்லையில் யாரும் அத்துமீறி நுழையவும் இல்லை, இந்தியப் பகுதியை யாரும் கைப்பற்றவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, "சீனாவின் ஆக்கிரமிப்புக்கு பயந்து பிரதமர் நரேந்திர மோதி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார்" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) காலை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் இதுதொடர்பாக இரண்டு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். "அது சீனாவின் நிலப்பகுதி என்றால், நம்முடைய ராணுவ வீர்ர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? எங்கு கொல்லப்பட்டார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!