11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு இதுவரையில் 22 இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது. பின்னர் வைரசின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 100 கிளைகளை மட்டும் மீண்டும் திறந்தது.

ஆனால் தற்போது, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரிசோனா, புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா தொற்றுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா தீவிரமடைந்துவரும் அரிசோனா, புளோரிடா, வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய 4 மாகாணங்களில் திறக்கப்பட்ட 11 கிளைகளை அப்பிள் நிறுவனம் தற்காலிகமாக மீண்டும் மூடியுள்ளது.

இந்நிலையில் குறித்த 11 கிளைகளும் மீள் அறிவித்தல் வரை மூடப்படுவதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!