வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்

1592284522112365.jpg?189db0&189db0

 

பொழுது போக்கு மற்றும் தொலைத் தொடர்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் செயலியில், புது அம்சமாக உள்ளூர் கடைகளின் பட்டியலை பார்க்க மற்றும் பொருட்களை வாங்கிய பின் கிரெடிட், டெபிட் உள்ளிட்ட அட்டைகள் மூலம் பணத்தை செலுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

முறைகேடான பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் வகையில் கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க ஆறு இலக்க கடவுச்சொல் எண் அல்லது கைரேகை பாதுகாப்பை கொண்டுள்ளது. ஒன்லைன் பண பரிவர்த்தைனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வசதி தற்போது பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக அதிகளவான சந்தையை வாட்ஸ் அப் நிறுவனம் பிரேசிலில் உருவாக்கி வைத்துள்ளது. அங்கு 120 மில்லியன் வட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

எனவே இந்த திட்டம் பிரேசிலில் வெற்றியடைந்தால் விரைவிலேயே ஏனைய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!