ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கு பி.சி.சி.ஐ போட்ட புது பிளான்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் தடைபட்டு வரும் நிலையில், பிசிசிஐ, இந்த தொடரை நடத்துவதற்கு வேறு ஒரு வழியை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 29-ஆம் திகதி துவக்க வேண்ட்டிய இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டு பின்னர் மே 2-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர் கொரோனா வைரஸ் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்த இந்த வருடம் ஐபிஎல் தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த வழிவகை செய்து கொடுக்கிறோம் என்று கேட்டிருந்தது. அதனை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை.

அதனை தாண்டி துபாய் கிரிக்கெட் வாரியம் துபாயில் ஐபிஎல் தொடரை நடத்த கேட்டிருந்தது. முன்னதாக 2009 ஆம் ஆண்டு அந்த நாட்டில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது.

மேலும் இந்த ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் பிசிசிஐக்கு கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். இதனால் எப்படியாவது இந்த தொடரை நடத்தி விட வேண்டும் என்று பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் ஐபிஎல் தொடரை நடத்த அனைத்து விதமான சாதகமான வாய்ப்புகளை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. அது இந்தியாவில் நடத்தப்பட்டாலும் சரி வெளிநாட்டில் நடத்தப்பட்டாலும் சரி இரண்டிற்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் நடத்தப்படுவது தான் தேர்வாக இருக்கும் என்று கருதுகிறோம்.

ஏற்கனவே இதற்கு முன்னர் இரண்டு முறை வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தியிருக்கிறோம். மேலும், உலக கோப்பை தொடர் குறித்து ஐசிசி இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் குறித்து எந்த அறிவிப்பும் வராது என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!