மலச்சிக்கலுக்கான சிறந்த தீர்வு இதோ!

மனிதரின் வாழ்வில் மனச்சிக்கல் இருக்கிறதோ இல்லையோ மலச்சிக்கல் இருந்து வருகிறது.

இப்படிபட்ட மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம்.

ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது போன்ற பழக்கங்கள் இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.

Advertisement

ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளே இதன் மூல காரணம்.

இதுபோன்ற மலச்சிக்கலுக்கான அறிகுறிகள் என்னவென்றால் இறுக்கமான மலம், வயிறு பாரமாக இருப்பது போன்ற உணர்வு, பசியின்மை, வயிற்று பகுதியில் லேசான வலி இருப்பதாகும்.

இதற்கான சரியான தீர்வும், நம் உணவு முறைகளில் சற்று மாற்றமும் இதோ கீழ் கண்ட பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன :

சிறிது உலர் திராட்சையை இரவில் தூங்கும் முன் சுடுநீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் வரவிடாமல் தடுக்கும்.

மலச்சிக்கல் தீவிரமான நிலையில் இருப்பவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து எடுத்து வந்தால் நல்லது.

வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து குடிப்பது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.

கற்றாழையை நன்கு காய வைத்து, பொடி செய்து மஞ்சள் தூள் கலந்து பருகி, தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாட்கள் குடித்து வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

அமரந்தஸ் கீரையின் இலைகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து இரவில் தூங்கும் முன் குடித்துவிட வேண்டும்.

விளக்கெண்ணெயை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை எடுத்துகொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு வறுத்து, ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட, மலச்சிக்கல் நீங்கி, வயிறு சுத்தமாகும். இது மிகவும் எளிய முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலையில் தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிக சிறந்த ஓர் தீர்வாகும்.

இதுபோன்ற உணவுகள் இல்லாமல், சிறந்த காய்கறிகளையும், நீர் சத்து நிறைந்த பழ வகைகளையும் எடுத்து கொண்டாலே எவ்வித மலச்சிக்கலும் அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!