டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ

சக்தி தனியார் தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தண்ணீர் வீசித் தாக்கியுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் டக்ளஸ் தேவானந்தா, அதாவுல்லா, மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே அதாவுல்லா நிகழ்ச்சி நெறிப்படுத்தினரையும் பேச விடாமல் குழப்பத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிவுக்கட்டத்தை எட்டிய போது அதாவுல்லா, “நீங்கள் எதுவும் செய்யவில்லை. 150 ரூபாய், 500 ரூபாய் என்று பிச்சைக்காரன்ர புண்ணா இருக்கனும் சமூகம், தோட்டக்காட்டானும் அப்படித்தான் இருக்கனும், தமிழனும், முஸ்லிமும் அப்படித்தான் இருக்கனும்?” என்று மனோ கணேசனை நோக்கி பொது நாகரீகமற்று விழித்துள்ளார்.

இதனையடுத்து கடும் கோபமடைந்த மனோ கணேசன் குறித்த துவேச கருத்தை அதாவுல்லா வாபெஸ் பெற வேண்டும். இது பிழையான கருத்து எனத் தெரிவித்த போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை தொடர்ந்து அதாவுல்லா மீது மனோ கணேசன் தண்ணீர் வீசி தாக்கியுள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மனோ கணேசன்,

மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல் 7 மணி வரையிலான “நேரடி” ஒளிபரப்புக்கு பின் 8 மணி வரையிலான “பதிவு செய்யப்பட்ட” நிழ்ச்சியின் போது தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.

அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேஜையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் “சூட்டை”, நான் எறிந்த “நீர்” குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன்.

என்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொதுவெளியில் பயனாபடுத்தக்கூடாத வார்த்தையை எனது படுத்த வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன். நடந்தவைகளை “எடிட்” செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும்படி சக்தி மின்னல் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமும் சொன்னேன். – எனத் தெரிவித்தார்.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!