ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?

சிபிஐ போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம்  அந்நிய முதலீட்டை பெறுவதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், அதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

நேற்றைய தினம் டெல்லி நீதிதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் டெல்லி வீட்டில் இருந்த ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் தற்போது சிபிஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்திலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest News

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு
தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்
நான் சர்வதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள்-ஜனாதிபதி
டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ
ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?