அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கம்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தது.

Advertisement

 

 

 

பின்னர் ஜுன் 4ம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

ஜுன் 6ம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!