இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மரணதண்டனையில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா? அதிர்ச்சியான மக்கள்

போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

 

நாம் நாட்டைப் பொறுப்பேற்கையில், இலங்கையில் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கொண்டுவரும் கேந்திர நிலையமாக இருந்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்நிலையை மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார்.

 

பணத்திற்கு அடிமையாகி மற்றொரு பிள்ளையினதோ இளைஞரினதோ வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு தம்மை உண்மையான பௌத்தனென்று சொல்லிக்கொள்வதில் பலனில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே பாதாள உலகக் கோஷ்டியினர் செயற்பட்டனர். எனினும் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் பாதாள உலக குழுவை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்நாட்டில் அதிகமாக போதைப் பொருட்களை கொண்டு செல்வது பெண்கள் என்பதை அறியும்போது நாம் கவலையடைய வேண்டியுள்ளது. சிறைச்சாலைக்கு போய் வந்தால் வாழ்க்கையே வேண்டாம் என்கின்ற நிலை உருவாகும். தற்போது மரண தண்டணையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பெயர் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் முதலாவது பெயரே ஒரு பெண்ணுடையது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்

Latest News

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு
தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்
நான் சர்வதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள்-ஜனாதிபதி
டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ
ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?