இலங்கை -இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்!

இந்திய அரசின் சலுகை நிதியுதவியின் கீழ் மாஹோவிலிருந்து ஓமந்தை வரை 130 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதையை மேம்படுத்துவதற்காக 91.26 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.

கொழும்பில் உள்ள ஐகோன் லிமிடெட் மற்றும் இலங்கை அரசு இடையே போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

130 கி.மீ பாதையின் மேம்படுத்தலில் 12 உபநிலையங்கள், 7 ரயில்வே நிலையங்கள் மற்றும் 78 கடவைகள்அடங்கும்.

100 ஆண்டுகளின் பின்னர் இந்த பாதை மேம்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த திட்டம் ரயில் பாதையின் தற்போதைய வேகத்தில் 60 கிமீ முதல் 120 கிமீ வரை இரட்டிப்பாக்கவுள்ளது, அத்துடன் பராமரிப்பு செலவுகளை குறைக்கும். இது பயணிகளின் பயண வசதியை மேம்படுத்துவதோடு, இலங்கை ரயில்வே நவீனமயமாக்கலுக்கும் மேலும் பங்களிக்கும்.

Latest News

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு
தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்
நான் சர்வதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள்-ஜனாதிபதி
டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ
ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?